ஈரோடு மாவட்டம், சின்னக்கோடம்பாக்கம் என்கிற கோபிசெட்டிபாளையம் அருகே இருக்கு "குரு அமர்ந்த ஊர்" எனும் குருமந்தூர்..
திருநள்ளாறு சனீஸ்வரர் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட கல்லில் ஒரு பகுதியை எடுத்து வந்து இங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.. இங்கே வழிபட்டால் திருநள்ளாருக்கே சென்று வழிபட்டதற்கு சமமாகிறது..
திருநள்ளாற்றில் அமையப்பெற்றதை போலவே முகப்பில் தர்பாரேன்யேஸ்வரர்.. மற்றும் விநாயகர் வீற்றிருக்கின்றனர்..
இதிலொரு சிறப்பு என்னன்னா.. அரசு மற்றும் வேம்பு மரம் இணைந்த இடத்தில் தர்பாரேன்யேஸ்வரரும் விநாயகரும் இருப்பது சக்திநிலை பொருந்திய ஆலயமாகிறது..
இந்த ஆலயத்தில் ஒரு வித சிறப்பு தீபம் ஏற்றும் முறைமை இருக்கிறது. இரட்டை திரியை பினைத்து குங்குமம் தடவி பண்ணீரில் நனைத்து சுத்தமான சமைக்கின்ற நல்லெண்ணைய்யில் விளக்கில் எள் நிறைத்து தீபம் ஏற்றும் போது தம்பதிகளுக்குள், குடும்பங்களுக்குள் ஒற்றுமை நிறைந்து வேற்றுமைகள் விலக ஆரம்பிக்கும்.. மூன்று வாரம் செய்ய வேண்டும்.. அந்த மூன்று வாரம் ஆலயபிரவேசம் செய்ய முடியாத அளவுக்கு சோதானைகள் அனிவகுத்தாலும்.. தொடர வேண்டும்..
இந்த தீப முறை இங்கே வரும் பலருக்கு தெரிவதில்லை..
சனைச்சரனிடம் சென்று ரொம்ப கஷ்டத்த குடுக்காதப்பா.. கருணை காட்டப்பா..னு வேண்டிட்டு..
ஆஞ்சநேயர்ட்ட.. போய் சனீஸ்வரர்ட்ட கொஞ்சம் எடுத்துச் சொல்லுங்க.. ரொம்ப கஷ்டப்படுத்துறாரு னு சொல்லி வேண்டிட்டு வர சுபிட்சம் பிறக்கும்..
நான் உங்களுக்கு கைய காட்டிவிட்டேன்.. இனி அங்கே வழிபட செல்வது உங்களது கர்மவினையை பொறுத்தது..
நல்லவையே நிகழட்டும்.. நலன்கள் பெருகட்டும்..!!
#ஃ
Super news
ReplyDelete