Wednesday, July 22, 2020

டாக்டரை உடனே அழைக்க

*மத்திய அரசின் அசத்தல் திட்டம்*

*eSANJEEVANI*

*www.eSanjeevaniopd.in*

எல்லார் வீட்லயும் வயசான தாத்தா, பாட்டி,   அம்மா,  அப்பா  இருப்பாங்க.பெரும்பாலும் அவங்க 
Blood_pressure( இரத்த கொதிப்பு) மற்றும் Diabetes(நீரழிவு நோய்) னு மாத்திரை சாப்பிட கூடியவர்களா இருப்பாங்க.

உடனே நெனச்ச நேரம் அவங்கள மருத்துவமனை னு கூப்டு போக முடியாம இருக்கலாம்.

அதும் இந்த ஊரடங்கு காலத்துல மருத்துவனைக்கு போனால் நோய் தொற்று ஏற்படும் என்ற பயமும் இருக்கும் பல பேருக்கு.

ஒரு தலைவலி,  உடம்பு_வலி னு எது இருந்தாலும் பக்கத்துல இருக்க மருத்துவமனைக்கு போக கூடிய ஆட்கள் கூட நிறைய இடங்களில் வீட்டிலேயே  முடங்கி இருப்பீர்கள். 

இனிமே அப்படி இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஆமாங்க *eSanjeevani* னு ஒரு website இருக்கு. இந்த Internet உலகில் எல்லாமே நம் கைகளில் வந்தாச்சு.

சின்ன பசங்களுக்கு கூட 

இத நீங்க Google_chrome ல type பண்ணி search பண்ணா போதும். Open ஆகும்.

1. Patient_Registration னு இருக்கும் அத click பண்ணி உள்ள போனீங்க னா

2. உங்க Mobile number type பண்ணா OTP வரும் அத வது நீங்க உள்ள போனா 

3. Patient_details type பண்ணனும்.
அப்புறம் நீங்க எந்த district னு போட்டா போதும்.

அவ்ளோதாங்க வேலை அங்க Online ல இருக்க Doctor ah உங்களுக்கு காமிக்கும்.

நீங்க Video_call மூலயமா உங்க தொந்தரவ சொல்லி Consultation பண்ணிக்கலாம். 

அவங்க ( டாக்டர்) உங்க complaint கேட்டு Tablets ( மருந்துகளை) உங்களுக்கு Online மூலயமா message ல tablets ah a அனுப்பிடுவாங்க.

அத நீங்க Medical_shop ல  ( pharmacy) காட்டி மருந்து வாங்கிக்கலாம்.

இது_முழுமையான_கட்டணமில்லா_சேவை 

முக்கியமான சில விஷயங்கள் என்ன னா 

Quacks *"போலி_டாக்டர்கள்"* கிட்ட ஏமாற வேண்டிய அவசியம் வராது. 

வீட்ல இருந்து Food_Order பண்ற மாதிரி வீட்ல இருந்தே மருத்துவரையும் பார்க்க முடியும். 

இந்த_website_காலை_10_மணி_முதல்_மதியம்_3_மணி_வரை_செயல்படும். 

Sunday_கூட_நீங்க_Consultation_பண்ணலாம்.

திருப்பூர்_மாவட்டம்_தமிழ்நாட்டில்_இந்த_E_consultation_யில்_முதல்_இடத்தை_பிடித்தது_குறிப்பிடத்தக்கது

இது உங்களுக்கு தேவை படாமல் இருந்தாலும் எங்கோ ஒருவருக்கு தேவை படலாம்,  முடிந்த அளவுக்கு மத்தவங்களுக்கும் சொல்லுங்க.. 

*கொரோனா காலத்தில் குழந்தைகளுக்கு பெரியவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.*

www.eSanjeevaniopd.in

குரு அமர்ந்த ஊர்

ஈரோடு மாவட்டம், சின்னக்கோடம்பாக்கம் என்கிற கோபிசெட்டிபாளையம் அருகே இருக்கு "குரு அமர்ந்த ஊர்" எனும் குருமந்தூர்..

திருநள்ளாறு சனீஸ்வரர் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட கல்லில் ஒரு பகுதியை எடுத்து வந்து இங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.. இங்கே வழிபட்டால் திருநள்ளாருக்கே சென்று வழிபட்டதற்கு சமமாகிறது..

திருநள்ளாற்றில் அமையப்பெற்றதை போலவே முகப்பில்  தர்பாரேன்யேஸ்வரர்.. மற்றும் விநாயகர் வீற்றிருக்கின்றனர்.. 

இதிலொரு சிறப்பு என்னன்னா.. அரசு மற்றும் வேம்பு மரம் இணைந்த இடத்தில் தர்பாரேன்யேஸ்வரரும் விநாயகரும் இருப்பது சக்திநிலை பொருந்திய ஆலயமாகிறது..

இந்த ஆலயத்தில் ஒரு வித சிறப்பு தீபம் ஏற்றும் முறைமை இருக்கிறது.  இரட்டை திரியை பினைத்து குங்குமம் தடவி  பண்ணீரில் நனைத்து சுத்தமான சமைக்கின்ற நல்லெண்ணைய்யில் விளக்கில் எள் நிறைத்து தீபம் ஏற்றும் போது தம்பதிகளுக்குள்,  குடும்பங்களுக்குள் ஒற்றுமை நிறைந்து வேற்றுமைகள் விலக ஆரம்பிக்கும்.. மூன்று வாரம் செய்ய வேண்டும்.. அந்த மூன்று வாரம் ஆலயபிரவேசம் செய்ய முடியாத அளவுக்கு சோதானைகள் அனிவகுத்தாலும்.. தொடர வேண்டும்..
இந்த தீப முறை இங்கே வரும் பலருக்கு தெரிவதில்லை..

சனைச்சரனிடம் சென்று ரொம்ப கஷ்டத்த குடுக்காதப்பா.. கருணை காட்டப்பா..னு வேண்டிட்டு.. 

ஆஞ்சநேயர்ட்ட.. போய் சனீஸ்வரர்ட்ட கொஞ்சம் எடுத்துச் சொல்லுங்க.. ரொம்ப கஷ்டப்படுத்துறாரு னு சொல்லி வேண்டிட்டு வர சுபிட்சம் பிறக்கும்.. 

நான் உங்களுக்கு கைய காட்டிவிட்டேன்.. இனி அங்கே வழிபட செல்வது உங்களது கர்மவினையை பொறுத்தது..

நல்லவையே நிகழட்டும்.. நலன்கள் பெருகட்டும்..!!
#ஃ

Tuesday, July 21, 2020

விழிப்புணர்வு தேவை

*எனக்கு வராது உனக்கு வராது என்ற எண்ணங்களை எல்லாம் தவிடுபொடியாக்கிவிட்டு ஆண்டிகளையும் தாக்குகிறது.ஆள்வோரையும் தாக்குகிறது.*

குப்பன் சுப்பன் அமிதாப்பச்சன் என எவரும் தப்பவில்லை. போகும் வேகம் பீதியளிக்கிறது. 

எனவே இனி நம்மை நாமே தான் காத்துக்கொள்ள வேண்டும்.

1. மாதம் ஒரு முறை மளிகை வாங்கவும்.

2. வாரம் ஒரு முறை காய்கறி வாங்கவும்.

3. மளிகை காய்கறி இரண்டையும் வீட்டிற்கு வெளியே அல்லது ஹாலில் பேப்பர் போட்டு பரப்பி 2-3 மணி நேரம் வைக்கவும். 

4. பைகளை வெளியேவே வைக்கவும்.

5. பால் பாக்கெட்டை சோப்பு நீரில் பின் நல்ல நீரில் கழுவவும். 

6. வெளியே சென்று வந்ததும் மாஸ்க்கை கழட்டி குப்பை கூடையில் போடவும். வாஷபிள் மாஸ்க் எனில் அதை தனியே மளிகை பைகளுடன் வைத்து துவைக்கவும். 

7. கை,கால், முகத்தை சோப்பு போட்டு கழுவவும். 

8. பேக்கிங் செய்யப்பட்டு வரும் மளிகைகளை சோப்பு நீரில் நனைத்த துணியால் துடைத்து பின் நல்ல நீரில் நனைத்த துணியால் துடைத்து பின் காய வைக்கவும். 

லூஸில் வாங்கிய மளிகை சாமான்களை அப்படியே ஒரு நாள் வரை விட்டு விடவும். முடிந்தால் வெயிலில் 2-3 மணி நேரம் காய வைக்கவும். 

9. இவற்றுக்கு முன்னும் பின்னும் கைகளை சோப்பு போட்டு கழுவவும். 

10. வெளியே சென்று வந்ததும் வெளிபாத்ரூம் வசதி இருந்தால் குளித்து விட்டு ஆடைகளை அங்கேயே நனைத்து வைத்து விட்டு வரவும். அப்படி வசதி இல்லையேல் நேராக குளிக்கப்போகவும். சோபா , சேர் போன்றவற்றில் உட்கார வேண்டாம்.

11. ஒரு மாஸ்க்கை 4-5 மணி நேரத்துக்கு மேல் பயன்படுத்த வேண்டாம். 

12. சிறிய பாட்டிலில் சானிடைசர் கையோடு கொண்டு போகவும். ஹிமாலயாஸில் வருகிறது. பிடித்த வாசனையுடன். நான் ஆரஞ்ச் ப்ளேவர் பயன்படுத்துகிறேன். 
இவ்வகை சானிடைசர்கள் காரிலும் வைத்திருக்கலாம். பாதுகாப்பானதுதான். 

13. கையுறை போட்டாலும் கவனமின்றி இருந்தால் தொற்று ஏற்படும்.

14. மாஸ்க் , கையுறைகளை தனி கவரில் போட்டு தூய்மை பணியாளர்கள் வசம் ஒப்புவிக்கவும். அப்படியே போட வேண்டாம்.

15. வீதியை கூட்டும் வகையில் பாண்ட், வேட்டி அணிய வேண்டாம். வீதியில் கிடக்கும் கொரானாவை விருந்து வைத்து வீட்டுக்கு அழைத்து வந்துவிடுவீர்கள்.

 16. எத்தனை விலை உயர்ந்ததாக இருந்தாலும் செருப்பை வெளியேவே விடவும். 

17. ஹால் தரையை தினம் ஒருமுறையாவது கிருமிநாசினி கொண்டு துடைக்கவும். 

18. வேலைக்காரர்களை அவசியம் இல்லை எனில் நிறுத்தி விடவும். அதிலும் பல வீடுகளில் வேலை செய்வோரை கண்டிப்பாக சேர்க்கவே வேண்டாம். (குறைந்தது அரை சம்பளம் கொடுக்கவும். அவர்களுக்கும் பசிக்குமே!)

19. தவிர்க்க முடியாத நிலையில் அவர்களையும் முழுமையாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வைக்கவும். 

20. வெளியாட்களை வீட்டுக்குள் அனுமதிக்க வேண்டாம். ப்ளம்பிங், எலக்ட்ரிகல், மற்ற பராமரிப்பு
மிக அவசியம் எனில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்த பின் உள்ளே விடவும். மறுத்தால் திருப்பி அனுப்பவும். நான் அவர்களை கை கால் கழுவ சொல்வதுடன் புதிய மாஸ்க் கொடுத்து அணிய சொல்வேன். இதில் தயவுதாட்சண்யம் வேண்டாம்.

21. உறவினர் யார் வீட்டுக்கும் போக வேண்டாம், அவர்களையும் வர ஊக்குவிக்காதீர்கள். இதிலும் தயவுதாட்சண்யம் வேண்டாம். 

22. கபசுர குடிநீர் தினமுமே 30-60 மில்லி குடிக்கலாம். ஒன்றும் ஆகாது.

23. ஏதேனும் ஒரு கசாயம்  (கீழாநெல்லி, தூதுவளை, கற்பூரவள்ளி, திரிபலா, இப்படி) தினமும்
குடிக்கவும்.

24. தினம் ஒரு சூப்
(முருங்கை இலை, மணத்தக்காளி, காய்கறி, ஆட்டுக்கால், சிக்கன், மட்டன், இப்படி) குடிக்கவும். காசு?
 வேறு வழி இல்லை. கொரானா சிகிச்சைக்கு குறைந்தது 1.5 லட்சம் முதல் 8 லட்சம் வரை பில் போடுகிறார்களாம். (உங்கள் பாக்கெட் கனம் பார்த்து) அதை ஒப்பிட்டால் இந்த செலவு சாதாரணமே. மேலும் ஆரோக்கியத்துக்கும் நல்லது.

25. சுகர் இருக்கா? அப்போது கார்போஹைட்ரேட்டை மிக குறைத்து புரோட்டீன் அதிகம் சேர்த்துக்கொள்ளவும்.

26.  பிராணாயாமம், மூச்சுப்பயிற்சி, யோகா செய்யவும்.  நேரங்கள் உள்ளஇடைவெளிகளில் செய்யலாம்.

Saturday, July 11, 2020

பயனுள்ள தகவல்கள்

விவிக்ஷா வானொலியின் பயனுள்ள தகவல்கள்: உங்கள் வீட்டுக்கு எத்தனை யுனிட்டு சுமார் 600 என டைப் அடிச்சிங்னா  ரூபாய் எவ்வளவு என தெரியும்.*
*TNEB electricity bill calculator link. Open the link, input no of units and find out the bill amount.*
===============
biogem.org/tool/TNEB

முகநூல்

நம்மை முகநூல் பக்கத்தில் தொடர
VIVIKSHA FM