Monday, September 28, 2020

விடா முயற்சி

 விடா முயற்சி


குறள் :

வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை

தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு. 


விளக்கம் :

செயலைத் தொடங்கிக் குறையாக விட்டவரை இவ்வுலகம் கைவிடும். ஆகையால், செயலில் முயற்சி இல்லாது இருத்தலைத் தவிர்க்க வேண்டும். 


கதை :

ஒரு விவசாயிக்கு வயது அதிகமானதால் இறக்கும் தருவாயில் இருந்தார். தம் பிள்ளைகள் பொறுப்பில்லாமல் இருப்பதை பற்றி கவலையாக இருந்தார். ஒரு நாள், அவர் தம் பிள்ளைகளை அருகில் அழைத்தார். தன்னுடைய நிலங்களை அவர்களுக்குப் பிரித்துக் கொடுத்தார். அது மட்டுமல்லாமல், அந்த நிலங்களில் ஓரிடத்தில், ஓரடி ஆழத்தில் புதையல் இருப்பதாகச் சொன்னார். அதைத் தேடி எடுத்துக்கொள்ளும்படிச் சொல்லிவிட்டு இறந்து போனார். 


பிள்ளைகள் மூவரும் தந்தைக்குச் செய்ய வேண்டிய இறுதிக் காரியங்கள் அனைத்தையும் செய்தார்கள். அதன்பின், அவர் குறிப்பிட்டிருந்த புதையலை எடுப்பதற்காக நிலத்தைத் தோண்ட ஆரம்பித்தார்கள். 


முதலில் மூத்த மகனின் நிலம் முழுவதையும் ஒரு அடி ஆழத்துக்கு தோண்டினார்கள். புதையல் எதுவும் கிடைக்கவில்லை. ஒருவேளை, அப்பா இரண்டடி என்று சொல்வதற்கு பதிலாக ஓரடி என்று சொல்லிவிட்டாரோ என்ற சந்தேகத்தில் பிள்ளைகள் மூவரும் சேர்ந்து, மூத்தவனின் நிலத்தை இன்னும் ஓரடி ஆழமாகத் தோண்டினார்கள். அப்போதும் அவர்களுக்குப் புதையல் கிடைக்கவில்லை. 


எப்படியும் புதையலைக் கண்டுபிடித்து விட வேண்டும் என்ற வெறியில், இரண்டாவது மகனின் நிலத்தையும் இரண்டடி வரை தோண்டினார்கள். ஏமாற்றம்தான் மிஞ்சியது. இவ்வளவு தூரம் வந்தபின் எப்படி விட முடியும் என்று கடைசி மகனின் நிலத்தையும் இரண்டடி தோண்டினார்கள். மறுபடியும் ஏமாற்றமே. 


அப்பா மேல் வருத்தம் வந்தாலும், அவர்கள் சரி தோண்டியது வீணாக வேண்டாம் என்று எண்ணி, அந்த நிலங்களில் விதை விதைத்தார்கள். நீர் பாய்ச்சினார்கள். உரம் போட்டார்கள். உழைப்பு வீண் போகுமா? ஆண்டு முடிவில் அவர்கள் நிலத்தில் அமோக விளைச்சல். அறுவடை செய்து விற்றதில் அவர்களுக்குக் கொள்ளை லாபம். 


இப்படி உழைப்பால் வரும் பயனைத்தான் அப்பா புதையல் என்று குறிப்பிட்டார் என்று பிள்ளைகள் மூவரும் புரிந்து கொண்டார்கள். 


நீதி :

எந்த செயல் எடுத்தாலும் அதை பாதியில் நிறுத்து விடாமல் விடாமுயற்சியுடன் செய்தால் கண்டிபாக பலன் கிடைக்கும். 


Sunday, September 27, 2020

நடத்தையில்_தெளிவுவேண்டும்

 #நடத்தையில்_தெளிவு

வேண்டும்...!!!


1. அடுத்தவர் பணத்தை முடிந்தவரை ரொட்டேட் பண்ணாதீர் ..(பண்ணவும் நினைக்காதீர்)


2. முடிந்தவரை அடுத்தவரின் கார் மற்றும் டூ வீலர் கடன் கேக்காதீர் ...


3. கடன்வாங்கி சென்ற வாகனத்தில் முடிந்த வரை எரிபொருள் நிரப்பி கொடுங்கள் ...


4. பொதுவாக செலவு செய்யும் இடத்தில் முன்கூட்டியே சந்தேகம் இருந்தால் கேட்டு விடுங்கள் ..செலவு செய்தபின் tally சாப்ட்வேர் மாதிரி கேள்வி கேக்காதீர்கள் ...


5. பொது இடங்களில் நிற்கும் போது யாருடைய வழியையேனும் அடைத்துக் கொண்டு நிற்கிறீர்களா என்று உறுதி செய்து கொள்ளுங்கள் ....

குறிப்பாக பொது இடம்,சிக்னல்


6. நண்பர்கள் / உறவினர்கள் வீடுகளுக்கு செல்லும்போது அவற்றின் அமைப்பைக் குறை சொல்லாதீர்கள். (பாத்ரூம் இங்கே இருந்திருக்கலாம்!) அமைப்பை மாற்ற யோசனை சொல்லாதீர்கள் ... (இந்த பிரிட்ஜை இங்கே வெச்சுக்கலாமே! - ( none of your business !). அவர்கள் படுக்கையறைக்கு செல்லாதீர்கள் ...

அவர்கள் போனைக் கேட்காதீர்கள் ... அவர்கள் வைஃபை பாஸ்வேர்ட் கேட்காதீர்கள் ...


7. கடனைத் திருப்பிக் கேட்கும் முன்னர் அதற்கு ஒரு குறிப்பிட்ட குறைந்தபட்ச நாட்கள் காத்திருங்கள் ...


8. ஒருவர் கைபேசி அழைப்பை எடுக்கவில்லை என்றால் தொடர்ந்து விடாமல் மீண்டும் மீண்டும் அழைக்க வேண்டாம் ...அது கொஞ்சம் சைக்கோத் தனம் . அவர்களையும் தேவையில்லாமல் பயமுறுத்தும் ...


9. டாக்சிதான் ஏறிவிட்டோமே என்று டாக்சியில் கத்திப் பேசாதீர்கள் ...

அது ஓட்டுனரை தொந்தரவு செய்யும். ஹெட்செட்டில் பாட்டு கேட்டுக்கொண்டே சத்தமாகப் பேசவோ , பாடவோ, டான்ஸ் ஆடவோ வேண்டாம் ...


10. நீங்கள் ஓட்டுனராகவோ , 

அல்லது சேவை வழங்குநராகவோ (எலக்ட்ரீசியன், பிளம்பர் , பெயிண்டர் etc ) இருந்தால் கஸ்டமரின் personal விஷயங்களை/தகவல்களைக் கேட்காதீர்கள் ...

உங்கள் வேலையை மட்டும் பாருங்கள் ...


11. ஒருவர் உங்களுக்கு treat தரும் போது இதுதான் சாக்கு என்று விலையுயர்ந்த அயிட்டங்களை ஆர்டர் செய்யாதீர்கள் ...


12. நீங்கள் guest ஆக ஒரு உறவினர் வீட்டுக்கு சென்றால் உங்களுக்குத் தேவையான மாத்திரை மருந்துகளைக் கொண்டு செல்லுங்கள் ...அங்கே போய் ராத்திரி 9 மணிக்கு 'ரகு , எனக்கு இந்த மாத்திரை வாங்கி ஆவந்திடறியா ' என்று கடுப்பேற்றாதீர்கள் ...


13. முதல் சந்திப்பிலேயே ஒருவரைப் பற்றிய opinion களைத் தவிருங்கள் ... 'நீங்க ரொம்ப shy டைப்பா? ' .வந்ததில் இருந்து பத்து வார்த்தை கூட பேசி இருக்க மாட்டீங்க ...


14.  நீங்கள் சந்திக்கும் நபரைப்பற்றி அதிகம் கேளுங்கள் /பேசுங்கள். உங்களைப் பற்றி அல்ல. 

(நான் எப்படின்னா, நான் இப்படித்தான், எனக்கு இது பிடிக்காது, ஒருநாள் நான்...etc )


15.  வயது, சம்பளம் , விவாகரத்து காரணம், இவைகளைக் கேட்காதீர்கள் ... தம்பதிகளிடம் எப்போது குழந்தை என்று கேட்காதீர்கள் ...


16. உங்களை விட வயதில் சிறியவர்களிடம் உரையாடும்போது அட்வைஸ் செய்யாதீர்கள் ...

(no one likes advices.)


17. வீட்டில் உறவினர்கள் வருகிறார்கள் என்றால் அவர்களுக்கு அன்றாடம் தேவையானவற்றை வாங்கி வையுங்கள் ...

அவர்களை பாத்ரூம் சென்று என்றோ தீர்ந்து போன பேஸ்டை பிதுக்க வைக்காதீர்கள்.


18. புதுமனைப் புகுவிழாவின் போது வீடு வாங்கியவரை முந்திரிக் கொட்டை போல 'ஸ்கொயர் பீட் எத்தனை ?' என்று கேட்காதீர்கள் ...எங்க ஏரியாவில் கம்மி ரேட் ' என்றெல்லாம் சொல்லாதீர்கள் ...

'வீடு நல்லா இருக்கு , கங்கிராட்ஸ் ' என்று முதலில் சொல்லுங்கள் ...


19. ஒருவர் உங்களிடம் அன்பளிப்பை கிஃப்ட் ரேப் செய்து கொடுத்தால் 'பிரிக்கலாமா?' என்று கேட்டுவிட்டுப் பிரியுங்கள் .

'ஓ , சாண்டிவிட்ச் மேக்கரா, ஏற்கனவே என் கிட்ட இருக்கே' என்றெல்லாம் சொல்லாதீர்கள். accept it .


20. பழைய நண்பர்கள் சந்திப்பில் உங்களைப் பற்றி/உங்கள் குழந்தைகள் பற்றி உயர்வாகவோ தாழ்வாகவோ பேசிக் கொள்ளாதீர்கள் ...

உங்கள் designationஐ கேட்டால் மட்டும் குறிப்பிடுங்கள் ...


21. ராத்திரி 8 மணிக்கு மேல் ஒருவருடைய வீட்டுக்கு செல்ல வேண்டாம் ...

9 மணிக்கு மேல் போன் செய்ய வேண்டாம் ...

(unless they are your spouse / lovers )

நீங்கள் guest ஆக சென்றிருந்தால் காலை சீக்கிரம் எழுந்து கொள்ளுங்கள் ...

10 மணிவரை குறட்டை விட்டுத் தூங்க வேண்டாம் ...


22. ஒருவரை 3 வினாடிகளுக்கு மேல் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருப்பது offensive . (அந்த ஒருவர் உங்கள் காதலியாகவோ காதலனாகவோ இல்லாத பட்சத்தில்!). அதேபோல் ஒருவர் சமையல் செய்யும் போதோ, 

கோலம் போடும் போதோ , வரையும் போதோ பின்னால் நின்று கொண்டு உற்றுப் பார்த்துக்கொண்டே இருக்காதீர்கள் ...


23. பாடல்களை எப்போதும் 

இயர் போனிலேயே கேளுங்கள்.

சைனா செட்டை இயக்கி மற்றவர்களை கதிகலங்க வைக்காதீர்கள் ...


24.  ஒருவரின் உடல் அமைப்பைப் பற்றி comment செய்யாதீர்கள் ...

( என்ன சார்? தொப்பை பெருசாயிருச்சு போல )


25.  டாய்லெட் யூரினலில் ஏற்கனவே ஒருவர் இருந்தால் அவர் பக்கத்தில் இருக்கும் யூரினலைத் தவிருங்கள் ...


26. மற்றவரின் taste /preference களைக் குறை சொல்லாதீர்கள் ...

( இந்த புக்கெல்லாம் எப்படித்தான் படிக்கிறீர்களோ / இந்தப் பாட்டெல்லாம் எப்படி கேட்கறீங்களோ!)


27. ஒருவர் போட்டோ பார்க்க போனை உங்களிடம் நீட்டினால், அந்த போட்டோவை மட்டும் பாருங்கள்.


28.  குழந்தை இன்னும் இல்லை என்றால் அத்துடன் விட்டு விடுங்கள் ...

ஏன் என்று என்று கேட்டு அவர்கள் மனதை காயப்படுத்தாதீர்கள்


29. நமது வீட்டில் அல்லது கடையில் அல்லது நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு மதிப்பளியுங்கள்.


30. நமக்கு கீழ் உள்ள ஊழியர்களை மேன்மேலும் அதிக வேலைப்பளு கொடுக்காதீர்கள்.

அப்படி வேலைகள் அதிகரிக்கும் போது அதற்கான ஊதியத்தை மனம் நிறைவாக வழங்குங்கள்.


#நாகரிகங்கள்  கருதி பொதுவெளியில் சற்று இங்கீதத்தோடு நடந்துகொள்ளுங்கள்...


குறை/ நிறை அனைவரிடமும் உண்டு ...

நம்மிடம் இருக்கும் தவறுகளை சரி செய்ய முயற்சி செய்வோம் ...!!!


பகிருங்கள், பலரும் தெரிந்துகொள்ளட்டும், இது பலரை பல தொல்லைகலிருந்து காத்துக்கொள்ளவே..!!

தலை சிறந்த மாநிலத்தை பற்றிய தகவல்:

 உலகில் ஒரு தலை சிறந்த மாநிலத்தை பற்றிய தகவல்: 


1. இங்கு 9 ஏர்போர்ட் உள்ளது. அதில் 4 இன்டர்நேஷனல் ஏர்போர்ட் 


2. சுமார் 36,000+ பெரிய கம்பெனிகள் உள்ளது 


3. உலகில் முதல் தோன்றிய மாநகரம் இங்கு தான் உள்ளது 


4. உலகில் தங்கம் அதிகமாக விற்பனையாகும் மாநிலம் இதுவே 


5. உலகில் உள்ள  மிக பெரிய கம்பெனிகள் பலவற்றின் CEO இந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் தான்


6. இந்த மாநிலம் எந்த மாநிலத்தையும் சார்ந்து இல்லை. ஆனால் இந்த தேசமே இந்த மாநிலத்தை சார்ந்து உள்ளது. 


7. முதல் முறையாக கடல்வழி வணிகம் துவங்கியது இந்த மாநிலம் 


8. இமேயில் கண்டுபிடித்து இந்த மாநிலம் தான். இதனால் இந்த உலகம் விரைவாக செயல்பட காரணம்


9. விவசாயம் முதல் வான்வெளி வரை பல அறிஞர்கள் தோன்றியது இந்த மாநிலத்தில் தான் 


10. உலக வரைபடம் வரைந்து காட்டியது இந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் தான் 


11. உலகில் முதல் hydrogen அனு ஆயுதம் இந்த மாநிலத்தில் தான் கண்டுபுடிக்கபட்டது 


12. உலகில் அதிகமாக இயற்கை வழியில் மின் உற்பத்தி செய்யும் மாநிலம் இதுவே ( hydro, wind, solar, Tidel ..ect ) 


 உலகில் முதல் முறையாக "தாய் மொழியை" உருவாக்கியது இந்த மாநிலமே. 


உலகில் முதல் முறையாக மொழியை தனது பெயராக கொண்ட ஒரே மாநிலம் *தமிழ்நாடு*

கோவிட்

 கோவிட் மூன்று நிலைகள்:


1. மூக்கில் மட்டுமே கோவிட் - மீட்பு நேரம் அரை நாள். (நீராவி உள்ளிழுத்தல்), வைட்டமின் சி பொதுவாக காய்ச்சல் இல்லை. அறிகுறி.


2. தொண்டையில் கோவிட் - தொண்டை புண், மீட்பு நேரம் 1 நாள் (சூடான நீர் கவசம், குடிக்க வெதுவெதுப்பான நீர், தற்காலிகமாக இருந்தால் பாராசிட்டமால். வைட்டமின் சி, பி.காம்ப்ளெக்ஸ்.


3. நுரையீரலில் கோவிட்- இருமல் மற்றும் மூச்சுத் திணறல் 4 முதல் 5 நாட்கள். .


மருத்துவமனையை அணுக வேண்டிய நிலை:

ஆக்ஸிஜன் அளவைக் கண்காணிக்கவும். இது 43 (சாதாரண 98-100) க்கு அருகில் சென்றால் உங்களுக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர் தேவை. வீட்டில் கிடைத்தால், வேறு எந்த மருத்துவமனையும் அனுமதிக்காது.


ஆரோக்கியமாக இருங்கள், பாதுகாப்பாக இருங்கள்!


டாடா குழுமம் நல்ல முயற்சியைத் தொடங்கியுள்ளது, அவர்கள் செய்திகள் மூலம் ஆன்லைனில் இலவச மருத்துவர்கள் ஆலோசனையை வழங்குகிறார்கள். இந்த வசதி உங்களுக்காகத் தொடங்கப்பட்டுள்ளது, இதனால் நீங்கள் மருத்துவர்களுக்காக வெளியே செல்ல வேண்டியதில்லை, நீங்கள் வீட்டில் பாதுகாப்பாக இருப்பீர்கள்.


கீழே உள்ள இணைப்பு, இந்த வசதியின் பயனைப் பெற அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன்.


தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவமனைகளுக்குள் இருந்து ஆலோசனை, நாங்கள் வீட்டிலேயே செய்யலாம்

தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவமனைகளில் எடுக்கப்படும் மருந்துகள்

1. வைட்டமின் சி -1000

2. வைட்டமின் ஈ

3. 15-20 நிமிடங்கள் சூரிய ஒளியில் உட்கார்ந்து.

4. முட்டை உணவு ஒரு முறை ..

5. குறைந்தபட்சம் 7-8 மணி நேரம் ஓய்வு / தூக்கம்

6. தினமும் 1.5 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்

7. அனைத்து உணவுகளும் சூடாக இருக்க வேண்டும் (குளிர்ச்சியாக இல்லை).

நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த மருத்துவமனையில் நாங்கள் செய்வது அவ்வளவுதான்


கொரோனா வைரஸின் pH 5.5 முதல் 8.5 வரை மாறுபடும் என்பதை நினைவில் கொள்க


எனவே, வைரஸை அகற்ற நாம் செய்ய வேண்டியது, வைரஸின் அமிலத்தன்மை அளவை விட அதிகமான கார உணவுகளை உட்கொள்வதுதான்.

போன்றவை:

வாழைப்பழங்கள்

பச்சை எலுமிச்சை - 9.9 பி.எச்

மஞ்சள் எலுமிச்சை - 8.2 பி.எச்

வெண்ணெய் - 15.6 பி.எச்

* பூண்டு - 13.2 பி.எச்

* மா - 8.7 பி.எச்

* டேன்ஜரின் - 8.5 பி.எச்

* அன்னாசிப்பழம் - 12.7 பி.எச்

* வாட்டர்கெஸ் - 22.7 பி.எச்

* ஆரஞ்சு - 9.2 பி.எச்


நீங்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை எப்படி அறிவது?


1. தொண்டை அரிப்பு

2. உலர் தொண்டை

3. உலர் இருமல்

4. அதிக வெப்பநிலை

5. மூச்சுத் திணறல்

6. வாசனை இழப்பு ....

வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சேர்ப்பது நுரையீரலை அடைவதற்கு முன்பு ஆரம்பத்தில் வைரஸை நீக்குகிறது ...

இந்த தகவலை உங்களிடம் வைத்திருக்க வேண்டாம். உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இதை வழங்கவும் ...


ஒன்றாக நாம் அதை கையாள முடியும் ..

******************************

Saturday, September 26, 2020

மன உறுதி

 டில்லி அரசரை வென்ற கதை


ஒருமுறை டில்லி அரசர் பாபர் தெனாலிராமனின் திறமையைக் கேட்டு அவரை நேரில் காண விரும்பினார். அவரது திறமையையும் சோதிக்க விரும்பினார். எனவே தெனாலிராமனை டில்லிக்கு அனுப்புமாறு விஜய நகரத்திற்கு ஓலை அனுப்பினார். 


கிருஷ்ண தேவராயரும் தெனாலிராமனை அழைத்து இதோ பார் ராமா! இங்கே உன் திறமையைக் காட்டி எங்களைச் சிரிக்க வைக்கிறாய். ஆனால் அதுபோல் அந்த பாபரிடம் நடக்காது. உன் திறமை அவரிடமும் பரிசு பெறுவதில்தான் உள்ளது. அவரிடம் நீ பரிசு பெற்று வந்துவிட்டால், நானும் உனக்குப் பரிசு தருவேன். உன்னைத் திறமைசாலி என்றும் ஒப்புக்கொள்கிறேன். இல்லை என்றால் உனக்குத் தண்டனை நிச்சயம் தெரிகிறதா! என்று எச்சரித்து அனுப்பினார். 


டில்லி வந்து சேர்ந்த தெனாலிராமன் பாபரின் அரண்மனைக்குச் சென்றார். சபையில் தான் செய்யும் அகடவிகடத்திற்கு யாரும் சிரிக்காததைக் கண்டு திகைத்தார்... யாரும் சிரிக்கக் கூடாது என பாபர் முன்பே கட்டளை இட்டிருப்பார் என யூகித்தார். இந்தச் சூழ்ச்சியை எப்படியும் முறியடிப்பேன், என முடிவு செய்து கொண்டார். மறுநாள் ராமன் அரண்மனைக்குச் செல்வதை நிறுத்திக் கொண்டார். பாபர் நினைத்தார், ராமன் சொல்லாமலேயே நின்று விட்டானே, அவனுக்கு சரியான தோல்வி என மகிழ்ந்தார். 


ஒருநாள் பாபர் தன் மந்திரியுடன் உலாவச் சென்றார். வழக்கம்போல அரண்மனைச் சேவகன் ஒருவன் சில பொன்முடிப்புகளைச் சுமந்து வந்தான். மன்னர் குதிரையை மெதுவாக நடத்திச் சென்று கொண்டிருந்தார். பாதை ஓரத்தில் முஸ்லிம் கிழவர் ஒருவர் தள்ளாடியபடியே ஏதோ செடிகளை நட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தார். அவரருகே சென்றார். பெரியவரே! இந்தத் தள்ளாத வயதில் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? என்றார். 


நான் நல்ல மாங்கன்றுகளை நட்டுக் கொண்டிருக்கிறேன். இதை அவர் மிகவும் சிரமப்பட்டுக் கூறினார். ஏன் ஐயா! இந்தத் தள்ளாத வயதில் உமக்கு ஏன் இந்தத் தொல்லை! இது காய்த்துப் பின் பழுத்து அந்தப் பழத்தை நீர் உண்ணப் போகிறீரா? என்று சிரித்தார். 


அரசே! நாம் உண்ணும் மாங்கனிகள் நம் முன்னோர் நட்டதுதானே! அவர்கள் மரங்களை நட்டதால் தானே நாம் இன்று மாங்கனிகளை உண்ணுகிறோம்! அவர்கள் நடாமல் இருந்திருந்தால் நமக்கு ஏது மாம்பழங்கள்?


எனவே வரும் தலைமுறையினர் உண்ணவே இம்மரங்களை நான் நடுகிறேன். ஆஹா! சரியான பதில். நல்லவிளக்கம். மிக்க மகிழ்ச்சி. உடனே மந்திரியார் ஒரு பொன் முடிப்பைப் பரிசாக அளித்தார். அதைப் பெற்றுக் கொண்ட கிழவர் சிரித்தார். அரசே! அல்லா பெரியவர். எல்லோருக்கும் மரத்தில் பழுத்தபிறகே பலன் தரும். ஆனால் பாபரின் ஆட்சியில் மரம் நட்டவுடனே பலன் கொடுத்து விட்டதே! பாபர் மனம் பெரிதும் மகிழ்ந்தது. 


ஆகா! சரியாகச் சொன்னீர்கள் பெரியவரே! என்றபடியே மந்திரியைப் பார்க்க அவர் இன்னொரு பொன்முடிப்பை அளித்தார். அதையும் பெற்றுக்கொண்ட பெரியவர், அரசே! இந்த மாங்கனிகள் பழுத்தப் பின் பலனளிப்பது ஆண்டுக்கு ஒருமுறைதான். ஆனால் தங்களின் மேலான குணத்தினால் நட்டவுடனே இருமுறை எனக்குப் பலனளித்து விட்டது. என்னே அல்லாவின் கருணை? என்றார். 


நன்றாகச் சொன்னீர்கள் பெரியவரே! என்று கூறியவர் மீண்டும் ஒரு பொன் முடிப்பையும் அளித்தார். பின் மந்திரியைப் பார்த்து மந்திரியாரே! சீக்கிரம் இங்கிருந்து சென்று விட வேண்டும். இல்லையேல் சாதுர்யமாகப்பேசி நம் பொக்கிஷத்தையே காலிசெய்து விடுவார் இந்தப் பெரியவர். என்று வேடிக்கையாகச் சொல்லிவிட்டுப் புறப்பட்டார் பாபர். 


சற்று நிற்க முடியுமா அரசே? என்று சொன்ன பெரியவர் தன் தாடி மீசையைக் களைந்துவிட்டு தெனாலிராமனாக நின்றார். பாபர் திகைத்தார். சற்று நேரத்திற்குள் மூன்று பரிசுகளைப் பெற்றவன் தெனாலி ராமனா?


தெனாலி ராமன் பணிவுடன் கூறினான். அரசே, மன்னிக்கவேண்டும். எங்கள் மன்னர் கிருஷ்ண தேவ ராயர் தங்களிடம், நான் பரிசு பெற்று வரவேண்டும் எனக் கட்டளையிட்டு அனுப்பினார். இன்று அவரது கட்டளைப் படியே தங்களிடம் பரிசுகளைப் பெற்று விட்டேன். இனி ஊர் திரும்பத் தாங்கள் அனுமதி அளிக்க வேண்டும். 


தெனாலி ராமா! உண்மையிலேயே நீ திறமைசாலிதான். உங்கள் மன்னருக்கு என் வாழ்த்துக்களையும் தெரிவி. நாளைக்கு அரச மரியாதையையும் பெற்றுக் கொண்டு விஜயநகரம் செல்லலாம் என்றார் அரசர். பின் மகிழ்ச்சியுடன் அரண்மனைக்குத் திரும்பினார். 


வெற்றியுடன் ஊருக்கு வந்து சேர்ந்த தெனாலி ராமனைப் பார்த்த கிருஷ்ணதேவ ராயர் நடந்தவைகளைக் கேட்டறிந்தார். தான் சொன்னபடியே தெனாலி ராமனுக்குப் பல பரிசுகளையும் கொடுத்தார். தன் நாட்டின் கௌரவத்தைக் காப்பாற்றிய ராமனை மன்னரும் மக்களும் போற்றிப் புகழ்ந்தனர். 


நீதி :

மன உறுதியுடன் எந்த காரியத்தைச் செய்தாலும் நிச்சயம் அது நமக்கு வெற்றியைத் தரும்.

உலகப்புகழ்பெற்ற டிசைனர்

*உலகப்புகழ்பெற்ற டிசைனர். சமீபத்தில் கேன்சரால் இறந்து போனார். அவர் கடைசியாக எழுதிய வார்த்தைகள்* *மரணத்தை விட உண்மையானது_இந்த_உலகத்தில் எதுவுமே இல்லை. * இந்த உலகத்தில் விலை உயர்ந்த பிராண்டட்_கார் என்னுடைய கேரேஜில் நிற்கிறது . ஆனால் நான் சக்கர_நாற்காலியில் அழைத்து செல்ல படுகிறேன்.! * இந்த உலகத்தில் உள்ள அனைத்து வகையான டிசைன்களிலும் கலர் களிலும் விலை உயர்ந்த ஆடைகள் விலை உயர்ந்த காலணிகள் விலை உயர்ந்த பொருட்கள் அனைத்தும் என் வீட்டில் உள்ளது. ஆனால் நான் மருத்துவமனை வழங்கிய சிறிய_கவுனில் இருக்கிறேன்.! * என் வங்கி_கணக்கில் ஏராளமான பணம் கிடைக்கிறது ஆனால் எதுவும் எனக்குப் பயன் இல்லையே.!! *என் வீடு அரண்மனை போன்று கோட்டை போன்று உள்ளது ஆனால் நான் மருத்துவமனையில் ஒரு சிறு படுக்கையில் கிடக்கிறேன். *இந்த உலகத்தில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுக்கு நான் பயணித்துக் கொண்டே இருந்தேன். ஆனால் மருத்துவமனையில் உள்ள ஆய்வகங்களுக்கு மற்றொரு லேபிற்க்கும் மாற்றி மாற்றி அழைத்துச் செல்லப்படுகிறேன்.! * நான் தினசரி லட்சக்கணக்கானவர்களுக்கு ஆட்டோகிராப் போட்டுக் கொண்டிருந்தேன் . ஆனால் இன்று மருத்துவர்களின் பரிந்துரை தான் எனது ஆட்டோகிராப். ! * அன்று தினசரி 7 சிகை அலங்கார நிபுணர்கள் எனக்கு அலங்காரம் செய்வார்கள். ஆனால் இன்று என் தலையில்_முடியே இல்லை . *உலகிலுள்ள பல வகையான உயர் நட்சத்திர ஓட்டல்கள் உணவுகளை உண்டு கொண்டிருந்தேன். ஆனால் இன்று பகலில் இரண்டு மாத்திரைகள் இரவில் ஒரு துளி உப்பு. ! *தனியார் ஜெட்டில் உலகம் முழுவதும் பறந்து கொண்டிருந்தேன். ஆனால் இன்று மருத்துவமனை வராந்தா விற்கு வருவதற்கு இரண்டு_நபர்கள் உதவுகிறார்கள். ? *எல்லா வசதி வாய்ப்புகளும் எனக்கு உதவவில்லை. எந்த விதத்திலும் ஆறுதல் தரவில்லை. ! ஆனால் சில அன்பானவர்களின் முகங்களும் அவர்களது தொழுதல்களும் என்னை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. ! *உலகப்புகழ்பெற்ற டிசைனர். சமீபத்தில் கேன்சரால் இறந்து போனார். அவர் கடைசியாக எழுதிய வார்த்தைகள் !....